இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
x
தினத்தந்தி 8 July 2025 9:15 AM IST (Updated: 9 July 2025 9:10 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 4 சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
    8 July 2025 7:43 PM IST

    4 சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

    தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், வரும் 10ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

  • எடப்பாடி பழனிசாமி  முதல்-அமைச்சராக சிறப்பு வழிபாடு
    8 July 2025 6:33 PM IST

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக சிறப்பு வழிபாடு

    தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

  • நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல்
    8 July 2025 6:31 PM IST

    நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல்

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

  • புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
    8 July 2025 6:30 PM IST

    புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    புதிய தொழிலாளர் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    8 July 2025 6:27 PM IST

    8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    பனையூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், "பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் அன்புமணியின் கரத்தினை வலுப்படுத்த பாமக உறுதியேற்கிறது. பொதுக்குழு தேர்வு செய்து தேர்தல் ஆணையம் அங்கீகரித்த தலைவர் அன்புமணி ஒப்புதல் இல்லாத கட்சிக் கூட்டங்கள் விதிகளுக்கு முரணானது என 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  • கடலூர் விபத்து - மாணாக்கர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி
    8 July 2025 5:11 PM IST

    கடலூர் விபத்து - மாணாக்கர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி

    கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் உயிரிழந்த மாணாக்கரின் உடலுக்கு s அஞ்சலி செலுத்தினார்.

  • அஜித்குமார் குடும்பத்தினருக்கு வைகோ நேரில் ஆறுதல்
    8 July 2025 5:06 PM IST

    அஜித்குமார் குடும்பத்தினருக்கு வைகோ நேரில் ஆறுதல்

    திருப்புவனத்தில் காவலர்கள் தாக்குதலில் இறந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு வைகோ நேரில் ஆறுதல் கூறினார். அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- விசாரணை என்ற பெயரில் தடி கொண்டு தாக்க காவல் துறைக்கு உரிமை இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் யார் ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது என்றார்.

  • அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை
    8 July 2025 5:00 PM IST

    அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் படம் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

  • அமைச்சர் இழுத்த தேர் சரிந்ததால் பரபரப்பு
    8 July 2025 4:38 PM IST

    அமைச்சர் இழுத்த தேர் சரிந்ததால் பரபரப்பு

    பெரம்பலூர் அருகே கோவில்பாளையத்தில் அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது. ஐயனார் தேரை வடம் பிடித்து இழுத்தபோது தேரின் அச்சு முறித்து கருப்புசாமி தேர் மீது சாய்ந்தது. ஐயனார் கோவில் திருவிழாவின்போது தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல் கண்காணிப்பாளர் ஆதார்ஷ்பசேரா, பாதுகாவலர்கள் மூலம் மக்களை அப்புறப்படுத்தினர். 

  • ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு
    8 July 2025 4:33 PM IST

    ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு

    பெண் ஒருவர் அளித்தப் புகாரில் ஆர்.சி.பி. பந்துவீச்சாளர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்தது உ.பி. காவல்துறை. திருமணம் செய்து கொள்கிறேன் எனப் போலி வாக்குறுதி |அளித்து தன்னை பாலியல் ரீதியாக யாஷ் தயாள் பயன்படுத்திக் கொண்டதாகப் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

1 More update

Next Story