இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025

Update:2025-04-10 09:03 IST
Live Updates - Page 2
2025-04-10 10:40 GMT

சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

2025-04-10 10:14 GMT

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என வெளியாகும் செய்தி பொய்யானது. அதிகாலையில் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது. தீயணைப்புத்துறையினர் உடனே தீயை அணைத்தனர் என நாமக்கல் மாவட்ட காவல் துறை அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

2025-04-10 09:02 GMT

இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இத்தாலியின் துணை பிரதமர் தஜானி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதேபோன்று, மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கரையும் நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட ஊடக செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

2025-04-10 07:42 GMT

ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

2025-04-10 07:27 GMT

Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம்.

Tags:    

மேலும் செய்திகள்