இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

Update:2025-12-10 09:05 IST
Live Updates - Page 2
2025-12-10 11:11 GMT

உலகளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் 49 சதவீதம் பங்கு வகிக்கும் யுபிஐ

2024-25 நிதியாண்டில் 12,930 கோடி பரிவர்த்தனைகளுடன் இந்தியா முதலிடமும், 3,740 கோடி பரிவர்த்தனைகளுடன் பிரேசில் 2ம் இடமும் பிடித்துள்ளன.

2025-12-10 11:08 GMT

திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

2025-12-10 11:03 GMT

சட்டமன்ற தேர்தல் - தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து காவல்துறை, சிஆர்பிஎஃப், ரயில்வே உள்ளிட்ட 15 துறைகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025-12-10 11:01 GMT

டிரான்ஸ்பார்மரில் மோதி நின்ற லாரி

கேரள மாநிலம் மலப்புரத்தில் இறக்கமான பாதையில் வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக், கார் மற்றும் டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. விபத்தில் 9 வயது சிறுமி உட்பட 10 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2025-12-10 10:41 GMT

"ஒரே சூரியன்.. ஒரே சேகர்பாபு - திவ்யா சத்யராஜ்

நீ அரசியலுக்கு வந்தால் சேகர்பாபுவை போல இருக்க வேண்டும் என் அப்பா கூறினார். அதற்கு நான், எப்போதும் ஒரே ஒரு சூரியன்தான், அதேபோல ஒரே ஒரு சேகர்பாபுதான் இருக்க முடியும். அவரை போல செயல்பட யாராலும் முடியாது என்றேன் என திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

2025-12-10 10:04 GMT

யுனெஸ்கோ பாரம்பரிய கலாசார பட்டியலில் இடம்பெற்றது தீபாவளி

தீபாவளி பண்டிகையை தனது பாரம்பரிய கலாசார பட்டியலில் சேர்த்தது யுனெஸ்கோ. இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் மரபை பாதுகாக்கும் வகையில் யுனெஸ்கோஅறிவித்துள்ளது. 

2025-12-10 09:09 GMT

தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் பாத யாத்திரை பிரியங்காவின் பேரணிக்கான பணிகளை ஒருங்கிணைக்க நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரியங்கா காந்தி மகளிர் பேரணியை ஒருங்கிணைக்க ஜோதிமணி எம்.பி. தலைமையில் குழு அமைத்தது காங்கிரஸ். மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். 

2025-12-10 09:07 GMT

அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவால் சலசலப்பு

அண்ணா அறிவாலயத்தில் திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன் முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி மறுத்ததாக கூறி கட்சியின் உறுப்பினர் அட்டையை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அனுமதி மறுக்கிறீர்களா என ஆடலரசன் கேள்வி எழுப்பினார். கோபமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததாக ஆடலரசன் தெரிவித்தார்.

2025-12-10 08:19 GMT

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை 


ஆஸ்திரேலிய சிறுவர், சிறுமியரின் வாழ்வை மாற்றும் சீர்திருத்தமாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

2025-12-10 08:18 GMT

எந்த ஷா வந்தாலென்ன..? எத்தனை திட்டம் போட்டாலென்ன...? - மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு 


தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி தேர்தல் தொடர்பான பணிகள் மூடுக்கி விடப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்