இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Dec 2025 10:59 AM IST
"அரசன்" படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் வைரல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
- 10 Dec 2025 10:57 AM IST
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்க வேண்டும்.ஆனால், செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
- 10 Dec 2025 10:54 AM IST
சட்டசபை தேர்தல்: விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அமமுக
2026-தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அமமுக வேட்பாளர்கள் இன்று (டிச.10) முதல் டிச.18ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுவை பூர்த்து செய்து, ஜன. 3-ம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென அமமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 10 Dec 2025 10:39 AM IST
சட்டசபை தேர்தல்: தவெக தலைவர் விஜய் போட்டியிட குறிவைக்கும் 3 தொகுதிகள்..!
முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால், 'வெற்றி நிச்சயம்' கிடைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
- 10 Dec 2025 10:38 AM IST
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலை, நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- 10 Dec 2025 10:37 AM IST
திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன்? கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கருத்து
அரசு எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவே செயல்படும் என்று பினராயி விஜயன் கூறினார்.
- 10 Dec 2025 10:36 AM IST
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை கோடம்பாக்கம், தி. நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 10 Dec 2025 10:34 AM IST
அதிமுக செயற்குழு: பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னையில் காலை 10 மணியளவில் கூடியது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடக்க இருப்பதால் இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
- 10 Dec 2025 10:33 AM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Dec 2025 10:13 AM IST
எனக்கு எதிராக கூட்டு சதி நடந்து இருப்பதாக சந்தேகம் உள்ளது: நடிகர் திலீப் பேட்டி
விசாரணை அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக, என்னை பலிகடா ஆக்கி விட்டார்கள் என நடிகர் திலீப் கூறியுள்ளார்.
















