தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்: பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி உறுதி
சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தீய சக்தி திமுகவை தமிழகத்தைவிட்டு அகற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை ஜெயலலிதா காத்தார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே நமக்கு தாரக மந்திரம்.அன்றைக்கு ஆட்சியில் இருந்தபோதும். இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மை விமர்சனம் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. நாட்டு மக்களைத்தான் வாரிசாக பார்த்தார்கள். அதனால்தான், இன்றைக்கு அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் முதலிடம் எது..? லிஸ்டில் சென்னை உள்ளதா..?
முழுக்க முழுக்க மக்களிடம் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ பெறப்பட்ட தரவுகளை உள்ளடக்கி இது வெளியிடப்பட்டுள்ளது.
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பிரசாரத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நடந்த 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி' கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்: சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு
அதிமுகவை எவராலும் எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நிலைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டு வந்துள்ளார் என்று சிவி சண்முகம் பேசினார்.
புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு
புதுச்சேரி மாநிலத்தில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தேனியில் முன்னாள் முதல்-அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழுமையாக வந்தபிறகு அதுகுறித்து நான் பேசுகிறேன். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவருமே பிரிந்து கிடக்கின்றன அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர். நன்றி வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசியல் கட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக.. கியூ.ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது.
2025-ம் ஆண்டின் உலக அழகான பெண்கள் பட்டியல் - இந்திய நடிகைக்கு 5வது இடம்
2025-ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியலை பிரபல நிறுவனம் வெளியிட்டது.