இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025

Update:2025-04-11 09:04 IST
Live Updates - Page 2
2025-04-11 09:04 GMT

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-04-11 08:59 GMT

பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் சென்னையிலுள்ள கமலாலயத்தில் தொடங்கியது. பாஜக தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

2025-04-11 08:57 GMT

போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்?

பாஜக மாநிலத்தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. பாஜக மாநிலத்தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2025-04-11 07:23 GMT

அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார்

சர்ச்சை பேச்சு - தி.மு.க துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம்

சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்க வாய்ப்பு 

2025-04-11 07:12 GMT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் - ரயில்வே போலீசார் தீவிர சோதனை

பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் - போலீசார் தீவிர சோதனை

2025-04-11 06:17 GMT

  • சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • பா.ஜ.க மாநில தலைவர் நியமனம், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை
  • அமித்ஷா உடன் அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை

2025-04-11 05:40 GMT

  •  தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்கவில்லை
  • த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
  • 2026 தேர்தலுக்கு த.வெ.க சார்பில் பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை
  • 70,000 பூத் கமிட்டிகளை அமைக்க த.வெ.க திட்டம்
  • த.வெ.க பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்த முடிவு
  • சென்னை பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

2025-04-11 05:22 GMT

அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு:

விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய பொன்முடி, பெண்கள் குறித்து முகம் சுழிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். பொன்முடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. திமுக துணைப்பொதுச்செயலாளராக பொன்முடி உள்ள நிலையில், அவரது பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

2025-04-11 05:09 GMT

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் இல்லத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புறப்பட்டு சென்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக  அவரது இல்லத்திற்கு அமித்ஷா புறப்பட்டு சென்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்