இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025

Update:2025-11-12 09:00 IST
Live Updates - Page 5
2025-11-12 06:38 GMT

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்கிய என்.ஐ.ஏ.


டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வந்தநிலையில், பயங்கரவாத சதித்திட்டம் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்ததை அடுத்து. தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

2025-11-12 06:34 GMT

தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவாக பெய்த வடகிழக்குப் பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 3 சதவீத குறைவாகவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை 15 சதவீத குறைவாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 447.9 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 380.3 மிமீ மழை மட்டுமே பொழிந்துள்ளது.

2025-11-12 06:30 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் 90 சதவீத வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது - மாவட்ட கலெக்டர் சுகுமார் பேட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் 90 சதவீத வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது. மொத்தமுள்ள 14.18 லட்சம் வாக்காளர்களில் 1.30 லட்சம் பேருக்கு மட்டுமே சிறப்பு திருத்த படிவம் வழங்கப்பட வேண்டியுள்ளது என்று மாவட்ட கலெக்டர் சுகுமார் கூறியுள்ளார்.

2025-11-12 05:58 GMT

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தினார். புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ‘உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் இதுவரை 37 நாட்களில் 79 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

2025-11-12 05:57 GMT

பேருந்தின் படியில் பயணித்த மாணவர் உயிரிழப்பு

சிவகங்கை: ஏனாபுரம் கிராமத்தில் மினி பேருந்தின் படியில் நின்று பயணித்த பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தும் மினி பேருந்தும் (உரசியபோது படிக்கட்டில் பயணித்த சந்தோஷ் உயிரிழந்துள்ளார்.

2025-11-12 05:55 GMT

வைகோவின் சமத்துவ நடைபயணம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை ஜன. 2ஆம் தேதி திருச்சியில் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சமத்துவ பயணம் என்ற பெயரில் 180 கி.மீ நடக்க இருக்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

2025-11-12 05:36 GMT

கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


இந்திய அளவில் தடம் பதித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


2025-11-12 05:35 GMT

டெல்லி கார் வெடிப்பு - மேலும் ஒரு டாக்டர் கைது


டெல்லியில் நேற்று முன்தினம் கார் வெடித்து சிதறியதில் பலியானோரின் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது. 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசாரின் அதிரடி விசாரணையில், இந்த கார் வெடிப்பு சம்பவம், தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.


2025-11-12 05:33 GMT

பாலிவுட் நடிகர் கோவிந்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி


வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2025-11-12 05:32 GMT

கொள்ளை சம்பவம்: காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக சீரழிந்து உள்ளது - அதிமுக குற்றச்சாட்டு


குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்