இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025

Update:2025-12-12 08:42 IST
Live Updates - Page 4
2025-12-12 04:40 GMT

15-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா 


தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

2025-12-12 04:26 GMT

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

75 வருடங்கள் சிறப்பான வாழ்க்கை.. 50 வருட புகழ்பெற்ற சினிமா வாழ்க்கை.. என் நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-12-12 04:15 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் அடுத்த மாதம் இறுதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு 


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் அடுத்தமாதம் இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

2025-12-12 04:14 GMT

15-ந்தேதி விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல் 


அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி 6.5 டன் எடை கொண்ட 'புளூபேர்ட்- 6' என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.

2025-12-12 04:12 GMT

பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து 


நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2025-12-12 04:11 GMT

உங்களின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை பல்லாண்டு மகிழ்விக்கட்டும்: ரஜினிக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து 



நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2025-12-12 04:09 GMT

ஆந்திரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி 


மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டைழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.

2025-12-12 04:07 GMT

முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் காலமானார் 


முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் (வயது 91) இன்று காலமானார். மராட்டியத்தின் லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் அவர் காலமானார்.

2025-12-12 04:05 GMT

சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாக காட்சி கொடுத்த அண்ணாமலையார் 


மகா தீபக்காட்சி நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனையடுத்து மலை உச்சியில் இருந்து மகா தீபக்கொப்பரை இறக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

2025-12-12 04:00 GMT

சென்னை: போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு 


தகவலின் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ரவுடி விக்கி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோட முயன்றார். இதில் சப் இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்பிற்காக ரவுடி விக்கியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டரும், ரவுடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்