இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Dec 2025 10:42 AM IST
"ஜெயிலர் 2" படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும், ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
- 12 Dec 2025 10:39 AM IST
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று தொடக்கம்.. இந்தியா- பாக். ஆட்டம் எப்போது தெரியுமா..?
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
- 12 Dec 2025 10:36 AM IST
மதம் மாறி காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்.. பெண்ணின் உறவினர்கள் செய்த கொடூரம்
இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர்.
- 12 Dec 2025 10:33 AM IST
"படையப்பா" ரீ-ரிலீசை ஒட்டி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
ரஜினியின் கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- 12 Dec 2025 10:12 AM IST
ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும்: டிரம்ப் எச்சரிக்கை
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார்.
- 12 Dec 2025 10:11 AM IST
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு
ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹொன்சு தீவில் உள்ள குஜி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
- 12 Dec 2025 10:10 AM IST
15-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா
தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
- 12 Dec 2025 9:56 AM IST
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
75 வருடங்கள் சிறப்பான வாழ்க்கை.. 50 வருட புகழ்பெற்ற சினிமா வாழ்க்கை.. என் நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Dec 2025 9:45 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் அடுத்தமாதம் இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
- 12 Dec 2025 9:44 AM IST
15-ந்தேதி விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி 6.5 டன் எடை கொண்ட 'புளூபேர்ட்- 6' என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.


















