இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

Update:2025-11-13 09:09 IST
Live Updates - Page 4
2025-11-13 06:55 GMT

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேமுதிகவின் வளர்ச்சிக்கான பணிகள், சட்டமன்றத் தேர்தல், கூட்டணி உள்ளிட்டவை குறித்து தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-11-13 06:39 GMT

டெல்லி கார் குண்டுவெடிப்பு: குற்றவாளி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியீடு


தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக காஷ்மீரில் 13 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

2025-11-13 06:38 GMT

இப்போது எங்களது அடுத்த இலக்கு இந்தியாவை.. - தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் 


இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

2025-11-13 06:05 GMT

பாகிஸ்தானில் இருந்து வெளியேற கோரிக்கை வைத்த வீரர்கள்.. எச்சரித்த இலங்கை அணி நிர்வாகம்


இஸ்லாமாபாத்தில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதன் காரணமாக பதற்றமடைந்த சில இலங்கை வீரர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தாயகம் திரும்ப விரும்புவதாக தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது.


2025-11-13 06:03 GMT

உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியாவுக்கு 9-வது இடம் 


இயற்கை பேரழிவுகளால் கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் டொமினிகா முதலிடத்தில் உள்ளது.

2025-11-13 06:02 GMT

நடிகைகளிடம் தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்க வேண்டும்- பிரீத்தி அஸ்ரானி 


பத்திரிகையாளர் சந்திப்பு எதற்காக நடக்கிறதோ, அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதுதான் சரியாக இருக்கும் என்று பிரீத்தி அஸ்ரானி கூறியுள்ளார்.

2025-11-13 06:00 GMT

டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்கா கருத்து 


டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ கூறுகையில், டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே தெரிகிறது. இதை விசாரிக்க அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தது. ஆனால் இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை வெகுவாக பாராட்ட வேண்டும் என்றார்.

2025-11-13 05:59 GMT

முடிவுக்கு வந்த‌து அமெரிக்க அரசு முடக்கம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றபட்டதால் 43 நாட்கள் நீடித்த அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது அரசாங்கத்தை மீண்டும் திறக்கும் மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்

2025-11-13 05:32 GMT

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸி. அணியை ஊதித்தள்ளிய இந்தியா


இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது. கேப்டன் தீபிகா 91 ரன்களும், புலா சரன் 54 ரன்களும் விளாசினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 57 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 235 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது. இது இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

2025-11-13 05:19 GMT

ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கு மாற ஜடேஜா வைத்த ‘செக்’... வெளியான தகவல்


ராஜஸ்தான் அணிக்கு செல்ல ஜடேஜாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஜடேஜா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்