இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

Update:2025-12-14 10:05 IST
Live Updates - Page 4
2025-12-14 04:51 GMT

45 ஆண்டுகள் இடதுசாரிகள் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க. 


திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா வசப்படுத்தியது. ஆளும் கம்யூனிஸ்டு கடும் பின்னடைவை சந்தித்தது.

2025-12-14 04:50 GMT

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 23ம் தேதி ஆலோசனை கூட்டம் 


ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒய்எம்சிஏ மண்டபத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் அரசியல் இறுதி முடிவு தொடர்பான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025-12-14 04:49 GMT

தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 18 சதவீதம் சரிவு; காரணம் என்ன? 


குழந்தை வளர்ப்பில் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

2025-12-14 04:48 GMT

காற்று மாசு அதிகரிப்பு: புதுடெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை


புதுடெல்லியில் நேற்று காற்றின் தரக்குறியீடு 440-ஐ தாண்டியதால் 4-ம் தரநிலை கட்டுப்பாடுகளை காற்றுத்தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியது.

2025-12-14 04:43 GMT

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி 


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2025-12-14 04:41 GMT

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: இன்று முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது 


பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2025-12-14 04:40 GMT

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: திருவண்ணாமலைக்கு இன்று மு.க.ஸ்டாலின் வருகை 


இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கின்றனர். 

2025-12-14 04:38 GMT

ராசிபலன் (14-12-2025): சுபச் செய்திகள் இன்று தேடி வரும் நாள்..! 


மீனம்

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். மேலதிகாரிகளிடம் அமைதி காக்கவும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Tags:    

மேலும் செய்திகள்