கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்.ஜி.ஆர். - த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம்
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர். என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையொட்டி இன்று பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாகும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் கண்ணிவெடி தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையின் 2 வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி
சென்னை முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். போபண்ணா- ஷுவாய் ஜாங் (சீனா) ஜோடி, முதல் சுற்றில் 6-4, 6-4 என்ற நேர்செட்களில் இவான் டோடிக் - கிறிஸ்டினா மிலாடெனோவிக் ஜோடியை வீழ்த்தியது.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்- பிரதமர் மோடி புகழாரம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி உள்ளார். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப எம்.ஜி.ஆர். மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டோம், என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரை புகழ்ந்து ஒரு வீடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.