புதுகோட்டை மாவட்டம் அரிமளம் அருகே 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (வயது 58) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சைல்டு ஹெல்ப் லைனில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய கல்விக்கொள்கையில் இந்தியை பிரதமர் ஒருபோதும் திணிக்கவில்லை. மும்மொழிக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 30 லட்சம் பேர் மும்மொழி படிக்கிறார்கள்..தமிழகத்தில் மும்மொழி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு எந்த தரவும் இல்லை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட மத்திய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதி ஆண்டிற்குள்ளேயே விடுவித்திட வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி அன்னபூர்ணா தேவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கோவையில் 17 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பைக் டாக்ஸி தடை தொடர்பாக மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, சட்டரீதியாக முடிவெடுக்கப்படும்'. ஆட்டோ தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி வைப்பது தொடர்பாக, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, த.வெ.க.வின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் ஆகியோருடன் சந்திப்பு
தமிழக அரசு, மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி நிதி தர முடியாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையானது.
அவருடைய பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், டெல்லியில் அமைந்துள்ள மத்திய மந்திரியின் அலுவலகம் முன் குவிந்த அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர், கோஷம் எழுப்பி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் அப்பாவு கூறினார்.