இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025

Update:2025-03-18 09:24 IST
Live Updates - Page 3
2025-03-18 04:36 GMT

கேரள மாநிலம் திருச்சூரில், கூகுள் மேப்பை நம்பி வழிதவறிய கார் தடுப்பணை நீரில் மூழ்கிய அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது. தடுப்பணையில் ஐந்தடி மட்டுமே ஆழம் இருந்துள்ளது. இதனால், காரில் பயணித்த 5 பேர் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர்.

2025-03-18 04:08 GMT

நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுன் பகுதியில் ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை முடிந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது.

2025-03-18 04:02 GMT

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு, அதனை தொடர்ந்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முற்றுகை போராட்டம், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி என அடுத்தடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்டு உள்ள பரபரப்பான சூழலில் அவருடைய இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2025-03-18 03:56 GMT

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை எழும்பூரில் இருந்து, வரும் 28-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), நாகர்கோவில் டவுன்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் டவுனில் நிறுத்தப்படும்.

இதேபோன்று மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து, வரும் 29-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), குருவாயூர்-நாகர்கோவில் டவுன் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக நாகர்கோவில் டவுனில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்