இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

Update:2025-04-18 09:21 IST
Live Updates - Page 3
2025-04-18 06:04 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

2025-04-18 06:03 GMT

பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த மார்ச் 20ம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

2025-04-18 05:36 GMT

நடிகர் ஸ்ரீ உடல்நிலை குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் உங்கள் அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

2025-04-18 05:36 GMT

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு.  படப்பிடிப்பு பகுதிக்கு வந்த ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2025-04-18 05:14 GMT

சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சிஐடியு அறிவித்துள்ளது. சாம்சங்கின் இன் டர்னல் யூனியனில் தொழிலாளர்கள் இணைய வற்புறுத்துவதை கைவிட வேண்டும் என்று சிஐடியு கூறியுள்ளது.

2025-04-18 04:55 GMT

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-04-18 03:53 GMT

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2025-04-18 03:53 GMT

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இரண்டாவது நாளாக திறக்கப்பட்ட நிலையில் பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய வரவில்லை. நேற்று பட்டியலின மக்கள் தரிசனத்திற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோயிலுக்கு இன்று யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

2025-04-18 03:53 GMT

பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, கேரளா அழைத்துச் சென்று திருமணம் செய்த சிவகுமார் (22) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகுமாருக்கு கடந்த ஆண்டு முதல் திருமணம் நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

2025-04-18 03:53 GMT

சர்வதேச பாரம்பரிய தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்