இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

Update:2024-12-19 09:03 IST
Live Updates - Page 5
2024-12-19 10:21 GMT

அமித்ஷா அவசர ஆலோசனை

பாஜக மூத்த மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், சிவராஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே நடந்த தள்ளு முள்ளு குறித்தும் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


2024-12-19 10:16 GMT

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். 

2024-12-19 10:10 GMT

அம்பேத்கருக்கு எதிரான அமித்ஷாவின் கருத்தை நாடு பொறுத்தும் கொள்ளாது, மறக்கவும் செய்யாது. இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

2024-12-19 10:08 GMT

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் சாமி தரிசனம் செய்தார். 

2024-12-19 10:05 GMT

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கண்டித்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2024-12-19 10:02 GMT

ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. புகார்

நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின்போது, ராகுல் காந்தி என் அருகே வந்து நின்று என்னை பார்த்து கத்தினார் அவரின் செயலால் எனக்கு அசௌகர்யமாக இருந்தது. தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவரிடம் நாகாலாந்து மாநில பாஜக பெண் எம்.பி. பங்னோங் கொன் யாக் புகார் அளித்துள்ளார்.

2024-12-19 09:26 GMT

தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் பாஜக புகார்

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பாஜக எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். 

2024-12-19 09:24 GMT

மாநிலங்களவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு

மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் மீது, மாநிலங்களவை துணைத் தலைவர் தனது முடிவை அறிவித்துள்ளார். மாநிலங்களவை செயலர் இந்த தீர்ப்பை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் நோட்டீசை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நிராகரித்ததாகவும், அந்த நோட்டீஸ் உண்மைகள் இல்லாத விளம்பரம் தேடும் நோக்கம் கொண்டது என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2024-12-19 09:02 GMT

ராகுல் காந்திக்கு எதிராக மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

2024-12-19 08:58 GMT

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசே அகற்ற வேண்டும் என்றுதென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்