'கூலி' படம்: மறு தணிக்கை செய்யப்பட்டு 4 நிமிட காட்சிகள் நீக்கம்
சிங்கப்பூரில் கூலி படத்தை மறுதணிக்கை செய்யப்பட்டு அதிலிருந்து 4 நிமிட காட்சியை படக்குழுவின் ஒப்புதலுடன் நீக்கியுள்ளனர். அதன்படி, பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது. இது போல் உலகம் முழுவதும் அனுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தர்மபுரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஷாருக்கான்.. பிறகு சிவகார்த்திகேயன்..- ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
'தீனா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் என வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கிறார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் 'சிக்கந்தர்' படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து 'மதராஸி' என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தொடர் சரிவில் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்
இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9.180க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,440 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். படங்கள்....தவெக விளக்கம்
தவெக மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற படங்கள், மேடையின் உச்சியில் இடம்பெற்றுள்ளன. மாற்றுக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஸ்ரீநாராயண குருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 21,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக 68,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையின் நீர்வரத்து 1,16,683 கன அடியாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 10 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் இன்று (20.08.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
மகரம்
காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்