இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Aug 2025 7:28 PM IST
விஜய் ஆண்டனியுடன் மோதும் கவின்...
கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 20 Aug 2025 6:50 PM IST
த.வெ.க. தலைவர் விஜய் சென்னையில் இருந்து காரில் மதுரைக்கு வந்து சேர்ந்துள்ளார்.
- 20 Aug 2025 6:48 PM IST
''புஷ்பா'' பட இயக்குனரின் மகளை கவுரவித்த தெலுங்கானா முதல்-மந்திரி
புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணியை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.
- 20 Aug 2025 6:12 PM IST
''கூலி'' படத்திற்கு யு/ஏ சான்று? - கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
கூலி திரைப்படத்தை யு/ஏ சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்சார் போர்டு போர்டு பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
- 20 Aug 2025 5:34 PM IST
எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கங்களுக்கு இடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்படி, உறுப்பினர்களின் விவாதங்களின்றி குரல் வாக்கெடுப்பு வழியே மசோதா நிறைவேற்றப்பட்டது.
- 20 Aug 2025 5:27 PM IST
துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ''கூலி'' பட நடிகைகள்?
தெலுங்கில் மகாநதி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது மீண்டும் தெலுங்கில் ''ஆகாசம்லோ ஓகா தரா'' மற்றும் அறிமுக இயக்குனர் ரவி நெலகுடிட்டியுடன் தனது 41-வது படத்திலும் நடிக்கிறார்.
- 20 Aug 2025 4:48 PM IST
''எதிர்பார்த்ததை விட பெரிய நட்சத்திரமாகிவிட்டார் '' - பிரபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தெலுங்கில் ''சுந்தரகாண்டா'' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 29 அன்று வெளியாக உள்ள நிலையில், புரமோஷனில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு நேர்காணலில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், பிரபாஸை பற்றி மனம் திறந்து பேசினார்.













