உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் குடியாத்தத்தில் உள்ள காக்கா தோப்பு பகுதியில் ஆதி செவிலியர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை மற்றும் கட்சி நிர்வாகியான நமீதா கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து அசத்தினர்.
ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளே காரணம் என்றும், பாகிஸ்தானுக்கு எதிரான போர்நிறுத்த முடிவை எடுத்ததற்கு அமெரிக்காவின் தலையீடோ அல்லது 3-ம் நாட்டின் தலையீடோ கிடையாது என்றும் தொடர்ந்து இந்தியா உறுதியாக கூறி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என டிரம்ப் மீண்டும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் வடக்கு பிரிவில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வரும் மனோஜ் முந்தா-மோனிகா தேவி தம்பதியின் மூத்த மகள் ரோஷினி குமாரியை நேற்று மாலை சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது. இரவு சுமார் 9.30 மணி வரை தேடியும் சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தாயின் கண் முன்னே இந்த கொடூரம் நடந்துள்ளது. இந்நிலையில், அந்த சிறுமியின் உடல் இன்று மீட்கப்பட்டு உள்ளது. சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை மீண்டும் அந்த பகுதிக்கு வருவதற்கான சாத்தியம் அதிகரித்து உள்ளது. இதனால், அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
புதுச்சேரியில் யோகா நிகழ்ச்சி நடந்தது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவண குமார் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, யோகாசனங்களை மேற்கொண்டார். பொதுமக்கள், மாணவ மாணவிகள், பத்திரிகையாளர்கள் என 160 பேர் வரை இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், நொறுக்கு தீனிகளும் வழங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வாரவிடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். தேவஸ்தான அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா: பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உலக யோகா தின வாழ்த்து!
யோகா மனிதர்களுக்கு காலம் கொடுத்த கொடை. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண். ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா கலைக்கு ஈடு இணை எதுவுமில்லை. விலையில்லா மருத்துவ கலையான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்று கொள்ள வேண்டும்; உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்! என தெரிவித்து உள்ளார்.
உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் கோவை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், தேனி ஆகிய 14 நகரங்களில் 'யோகா வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆரம்பம்' என்ற தலைப்பில் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், 10 வயது மற்றும் அதற்குமேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகாசனங்களை செய்து அசத்தினார்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியர்களும் அமெரிக்கர்களும் உடல்நலன் மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வகையிலான யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
ஆபரேஷன் சிந்து பற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி கூறும்போது, 290 இந்தியர்களை சுமந்து கொண்டு ஈரானில் இருந்து வந்த 3-வது சிறப்பு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது. இதில், 190 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். டெல்லி, அரியானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
நமக்காக ஈரான் அரசு தன்னுடைய வான்வெளியை திறந்து, இந்தியர்கள் செல்ல அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கும் விசயம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை இது காட்டுகிறது. ஆபரேஷன் சிந்து விமானங்கள் இஸ்ரேலில் இருந்தும் விரைவில் சொந்த நாட்டுக்கு வந்து சேரும் என்று அவர் கூறியுள்ளார்.