சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் கூடுதல் ஏற்பாடுகள் - விஐபி தரிசனம் ரத்து
வழக்கத்தைவிட சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா..? - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவர்களின் கோரிக்கை இருந்து வருகிறது என்றும், பழைய ஓய்வூதியத்தை பொறுத்தவரையிலும் குழு அமைக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கருத்துக்களை அந்த குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அப்படியே ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்-அமைச்சர் கவனித்து வருவதாகவும் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்
பூங்காவுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் ஆக்கிரமிப்பு: அமைச்சர் கே.என். நேரு அளித்த உறுதி என்ன..?
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பாமக உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சியில் புதிய லே அவுட் போடப்படும் போது பூங்காவுக்காக ஒதுக்கப்படும் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகவும், மாநகராட்சி பூங்கா அமைத்து பராமரிக்கும் பணியை அரசே ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, OSR நிலத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்படும் இடத்தை எவராலும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், ஒருவேளை உறுப்பினர் சொல்வது போல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அது எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து அந்த நிலம் மீட்கப்படுவதோடு, சேலம் மாநகராட்சிக்கு போதுமான பூங்காக்கள் அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, மறைமலைநகர் நின்னக்கரை ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்,
மேலும், சென்னை மாநகர் பகுதி தவிர்த்து சென்னை புறநகர் பகுதிகளில் 3,898 நீர் நிலைகள் உள்ளன. இதில் தாம்பரம் பகுதிகளில் ரூ.211 கோடி செலவில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளில் ரூ.780 கோடி செலவில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதைத் தவிர்த்து செங்கல்பட்டு பகுதியில், ரூ.76.26 கோடி, மதுராந்தகம் பகுதியில் ரூ.9.50 கோடி, மறைமலை நகர் பகுதிகளில் ரூ.300.57 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அப்போது, முற்போக்கு கொள்கையோடு பெரும்மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை போப் பிரான்சிஸ் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், வழக்கமான நிகழ்வுகள் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அறையில் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைமலை நகர் பகுதியில் ரூ.37 கோடி செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, மறைமலைநகர் நின்னக்கரை ஏரியில் கழிவுநீர் விடுவிப்பதைத் தடுக்க அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, மறைமலை நகர் பகுதிகளில் 33 நீர் நிலைகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது, 2.20 எம்எல்டி கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. மேலும், ரூ.37 கோடி செலவில் 15.92 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
செங்கல்பட்டு: பெண்களுக்கு என்று தனியாக நவீன பூங்கா அமைக்கப்படுமா.? அமைச்சர் பதில்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, செங்கல்பட்டு தொகுதியில் பெண்களுக்கு என்று தனியாக நவீன பூங்கா அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, நகர்புறங்களில் மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பத்த பூங்கா அமைத்து வருகிறோம். பூங்கா அமைக்க தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து உள்ளார். எனவே இடம் இருந்தால் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் அடையாளம் தெரியா நபர்களால் கொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக் கொண்டு கனடாவில் உள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ராகு-கேது பெயர்ச்சி எப்போது...? - திருநாகேஸ்வரம் கோவில் வெளியிட்ட முக்கிய தகவல்
2025 - ராகு-கேது பெயர்ச்சி ஏப். 26-ம் தேதி நிகழ உள்ளதாக திருநாகேஸ்வரம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.