தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிராக சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்புமை வைத்து அழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் அறிவித்து உள்ளார். இதனை வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் தெரிவித்து கொள்கிறேன்.
என்னுடன் இத்தனை நாட்கள் உண்மையாய், உறவாய் பழகிய அத்தனை உறவுகளுக்கும் நன்றி என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மார்ச் 10ம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனை மீண்டும் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்கடை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவி வருவதால் மலை அடிவாரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து, மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தது கல்லூரி நிர்வாகம். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காய்ந்த புற்கள் மற்றும் மரங்களால் வேகமாக காட்த்தீ பரவி வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கை மார்ச் 1 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 32,438 பணியிடங்களில், சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்புக்கு, அடிப்படை சம்பளமாக ரூ 18,000 அறிவிக்கப்பட்டுள்ளது; மேலும் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளம் மூலம் அறியலாம்.
வரும் 28-ம் தேதி காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என்று ஈஷா யோகா மைய சிவராத்திரிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.