இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

Update:2025-09-25 09:10 IST
Live Updates - Page 2
2025-09-25 11:13 GMT

நாடு மின்சார வேகத்தில் முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி

பிகானீர்-டெல்லி கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையையும், ஜோத்பூர் - டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையும் உதய்பூர் நகரம்- சண்டிகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்டோருக்கு 15,000க்கும் மேலான பணி நியமன கடிதம் வழங்கினார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

நாடு மின்சார வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த வேகம் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது. இந்தியாவின் மின் திறனின் புதிய அத்தியாயம் ராஜஸ்தான் மண்ணிலிருந்து எழுதப்படுகிறது. ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம், மராட்டியத்தில் ரூ.90,000 கோடிக்கு மேல் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.மின்சாரத்தின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் அரசு புறக்கணித்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னும் நாட்டில் 18,000 கிராமங்களில் மின் கம்பங்கள் இல்லை. ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கி, 25 மில்லியன் வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கினோம் என்றார்.

2025-09-25 10:59 GMT

கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா தொடங்கியது

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இரு மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா தொடங்கியது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பங்கேற்று பேச உள்ளனர். கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்கள், சாதனைகளை முன்னிலைப்படுத்தி 7 பகுதிகளாக விழா நடைபெற உள்ளது. 

2025-09-25 10:42 GMT

த்ரிஷா தோசருக்கு வாழ்த்துகள் - கமல்ஹாசன்

சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் 'நாள் 2' என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை த்ரிஷா தோசர்-க்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்ததற்காக த்ரிஷா தோசர்-க்கு, என் மனம் நிறைந்த பாராட்டுகள். நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம்! உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

2025-09-25 09:19 GMT

10 நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீடு ஒதுக்கப்படும் - மத்திய அரசு

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு இல்லம் ஒதுக்கீடு செய்யப்படும் என டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசியலில் அல்லாதவர்களுக்கும் இந்த பிரச்சினை அடிக்கடி நடப்பதாகவும், இது குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிப்போம் எனவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

2025-09-25 09:13 GMT

லடாக் மக்களின் குரலை நசுக்கும் பாஜக - அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அரசியல் போதையில் உள்ள பாஜக, மாநிலங்களை யூனியன் பிரதேசமாக்கி அதிகாரத்தை பறிக்கிறது. லடாக் மக்களின் குரலை பாஜக நசுக்கப்பார்க்கிறது. தற்போது லடாக்கில் நடக்கும் போராட்டம் நாளை நாடு முழுவதுமான போராட்டமாக மாறலாம். லடாக்கில் நடப்பவை கவலை தருகிறது தேசபக்தர்கள் லடாக் மக்களை ஆதரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

2025-09-25 08:22 GMT

ஜி.கே.மணியின் பதவி பறிப்பு.. பாமக சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு


சட்டமன்ற தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியையும், கொறடா பொறுப்பில் இருந்து அருளையும் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  


2025-09-25 08:19 GMT

சி.வி.சண்முகத்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்தார். .

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில், “இன்றைய தினம் அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான அருமை நண்பர் சி.வி.சண்முகத்தை அவருடைய திண்டிவனம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என்று பதிவிட்டுள்ளார். 

2025-09-25 08:13 GMT

ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30ம் தேதி தீர்ப்பு


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர்.

கடந்த மாதம் இருவரும் ஒரே காரில் சென்னை குடும்ப நல கோர்ட்டிற்கு வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


2025-09-25 08:12 GMT

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு


இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் அக்டோபர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.


2025-09-25 07:03 GMT

தமிழ்நாட்டில் அமையும் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்


திராவிட மாடல் அரசு அறிவித்த கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்