இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025

Update:2025-02-27 09:13 IST
Live Updates - Page 2
2025-02-27 12:03 GMT

வயநாடு வனஉயிர் சரணாலயப் பகுதியில் மேலும் ஒரு புலிக்குட்டி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்தில் மூன்று புலிக்குட்டிகள் இப்பகுதியில் உயிரிழந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) பிரதிநிதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்பதால், அதற்குப் பிறகே புலிக்குட்டிகள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

2025-02-27 12:00 GMT

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  

2025-02-27 11:27 GMT

எல்லை பாதுகாப்புப்படை வீரராக இருந்த என் கணவர் சீமான் வீட்டில் கடமையைதான் செய்தார். எல்லை பாதுகாப்பு படை வீரராக நாட்டை காத்தவருக்கு இப்படி ஒரு கொடுமை என கைதான அமல்ராஜின் மனைவி கூறியுள்ளார்.

2025-02-27 10:57 GMT

சீமான் வீட்டில் நடைபெற்ற களேபரம் தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை. சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக காவலர் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2025-02-27 10:50 GMT

காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சீமானின் மனைவி வீட்டில் தனியாக இருப்பதால் தங்களை அனுமதிக்க வேண்டும் என பெண் தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

2025-02-27 10:30 GMT

அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்தி குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் நீலாங்கரை பாலவாக்கம் பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். சீமான் வீட்டுக்கு கூடுதலாக காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு எல்லாம் என்னால் ஆஜராக முடியாது. உங்களால் என்ன செய்ய முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பி இருந்தார். 

2025-02-27 10:24 GMT

சீமான் வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு வந்தபோது, காவலாளிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவலாளி கைது செய்யப்பட்டார். வீட்டை சுற்றி ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

2025-02-27 10:23 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது இரு சக்கர வாகனம் மோதியது. மயங்கிய நிலையில் கிடந்த சிறுத்தை சிறிது நேரம் கழித்து எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதி. சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

2025-02-27 10:07 GMT

உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுடன், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரிகள் பிரஜேஷ் பதக், கே.பி. மவுரியா மற்றும் பிற மந்திரிகள் பிரயாக்ராஜ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்