இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025

Update:2025-08-27 09:45 IST
Live Updates - Page 4
2025-08-27 04:18 GMT

த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பெரம்பலூர்.

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், 2,500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விஜய் "உங்கள் விஜய்.... நான் வரேன்... " என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.

2025-08-27 04:17 GMT

விநாயகர் சதுர்த்தி: சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

சென்னை

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் விநாயர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு இன்று சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2025-08-27 04:16 GMT

சுபமுகூர்த்த தினம்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வினியோகம்

தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதன்படி ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்