இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025

Update:2025-10-27 09:31 IST
Live Updates - Page 2
2025-10-27 11:48 GMT

12 மாநிலங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7 வெளியீடு

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SIR பணிகள் முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நிறைவடைந்து 2026 பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

“இந்தியாவில் 1951 முதல் 2004 வரை இதுவரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. இடப்பெயர்வு, இரட்டைப்பதிவு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் SIR நடைபெற உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், குஜராத், உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது உள்ள வாக்காளர் பட்டியல் freeze செய்யப்படும், அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

2025-10-27 11:38 GMT

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தாரகாசுரனை வதம் செய்த முருகப்பெருமான்

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு விமரிசையாக நடைபெற்று வருகிறது. போர்க்களத்தில் முதலில் தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். அப்போது அலைகடலென திரண்டிருந்த பக்தர்கள் ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

2025-10-27 10:04 GMT

சென்னை அண்ணா நகரில் 7 வயது மகனை கொடூரமாகக் கொலை செய்த தந்தை. மனைவியும் கழுத்து அறுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

▪️ஐ.சி.எப். பணியாளரான நிவேதிதா (36) கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

▪️அரசு அதிகாரியான நவீன் கண்ணா, பங்குச்சந்தையில் பணம் இழந்ததால் இது தொடர்பான தகராறில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

2025-10-27 10:03 GMT

ஆதவ் அர்ஜுனா மனு - குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்

கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய ஆதவ் அர்ஜுனாவின் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வருகிறது.

2025-10-27 10:00 GMT

என்னை மன்னித்து விடுங்கள்' - கண்ணீர் மல்க விஜய்

சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூரில் வந்து சந்திப்பேன். வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன். வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

2025-10-27 09:10 GMT

விஜய் ஆறுதல் சந்திப்பு நிறைவு

மாமல்லபுரத்தில் நடைபெற்ற விஜய்யின் ஆறுதல் சந்திப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 மணி நேரம் சந்திப்புக்கு பின் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒரு பிரிவினர் பேருந்தில் கரூர் நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.

2025-10-27 09:06 GMT

கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது

அமெரிக்கா: வீட்டு வேலையில் தனக்கு உதவாத கணவரை கழுத்தில் கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி பள்ளி ஆசிரியை சந்திரபிரபா சிங் (44) கைது செய்யப்பட்டார். காயமடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமைக்கும்போது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியுடன் திரும்பியபோது தற்செயலாக காயமடைந்ததாக பிரபா கூறிய நிலையில், வேண்டுமென்றே அவர் செய்ததாக கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2025-10-27 09:01 GMT

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சோகம்

தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் கீழே விழுந்ததில் லாரி பின் சக்கரத்தில் சிக்கி சார்லஸ் ஆகாஸ் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.லாரி ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருக்கின்றனர்.

2025-10-27 08:35 GMT

ரெயிலில் அனுப்புவதில் தாமதம்: மழையில் நனைந்து லாரிகளிலேயே முளைத்த நெல் மூட்டைகள் - அன்புமணி கண்டனம்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வெளிமாவட்டங்களில் உள்ள அரிசி அரவை ஆலைகளுக்கு ரெயில்களில் ஏற்றி அனுப்புவதற்காக கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட 36 ஆயிரம் நெல் மூட்டைகள் இன்னும் அனுப்பி வைக்கப்படாததால், கடந்த 10 நாள்களாக பெய்த மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்து உள்ளார்.

2025-10-27 08:10 GMT

’ஆர்யன் படத்தின் சில காட்சிகள் அந்த படத்திலிருந்து ஈர்க்கப்பட்டது’ - விஷ்ணு விஷால்

ஆர்யன் படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், புரமோஷன் பணிகளில் விஷ்ணு விஷால் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்திய நடந்த ஒரு நேர்காணலில், தனக்குப் பிடித்த மலையாளத் திரைப்படங்களை அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்