இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

Update:2025-04-28 09:03 IST
Live Updates - Page 3
2025-04-28 08:04 GMT

  • இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்ணின் விசாவை நீட்டிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
  • பாகிஸ்தான் பெண்ணின் ரிட் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • "பாதுகாப்பு காரணங்கள் ஒட்டி எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவில் தலையிட முடியாது"-டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

2025-04-28 06:46 GMT

 திமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது

பணியில் இருக்கும் காவலர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

காவலர்களுக்கு வார விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது

காவலர்களின் நலன் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது

- முதலமைச்சர் ஸ்டாலின்

2025-04-28 04:41 GMT

  • அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டதால் பரபரப்பு
  • திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
  • மேல்பாக்கம் வளைவு பகுதியில் 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டுள்ளது
  • ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சம்பவ இடத்தில் ஆய்வு
  • ரயிலை கவிழ்ப்பதற்கு சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

2025-04-28 04:28 GMT

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள் நிர்வாகத்தின் தூண்களாக, அரசின் கரங்களாக விளங்கி வருகிறார்கள். திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி முக்கிய காரணம். அரசு நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் செல்ல பணி செய்வது அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களின் நலன் கருதி 9 அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை சரண்டர் செய்து 1-4-2025 முதல் பணப்பயன் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.3500 கோடியை அரசு ஒதுக்கும்.

1-1-2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டுக்கு ரூ.1,252 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைப்படி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். இதனால், 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழில்கல்விக்கு ரூ.1 லட்சமாகவும், கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது.

அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் என்று வழங்கப்படுகிறது. இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு சி, டி பிரிவு அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பரிசு தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்படுகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது அறிக்கையை 9 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 1-7-2024 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அது அவர்களின் பதவி உயர்வை பாதிப்பதாக கூறப்பட்டது. எனவே, மகப்பேறு விடுப்பு காலமும் தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

2025-04-28 03:40 GMT

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள், பயங்கரவாத‌த்திற்கு இடம் கொடுத்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு காஷ்மீரில் ஒரு லட்சத்து 80,000 வீர‌ர்களை வெளியேற்றியது ஏன் என்றும் மத்திய அரசுக்கு  திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2025-04-28 03:39 GMT

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி பயணம்; பரபரப்பான அரசியல் சூழலில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கட்சியின் உயர் மட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்