கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, பங்குனி ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு நாளை திறக்கப்படும். ஏப்ரல் 2-ந்தேதி பங்குனி ஆறாட்டு விழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
சித்திரை விஷு பண்டிகையும் வரவுள்ள நிலையில் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம் என எக்ஸ் சமூக ஊடகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7-ந்தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாகுப் மென்சிக், செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சை 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை கடந்து விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.67,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மீறினால் ஈரான் மீது குண்டுமழை பொழியும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் காலை முதல், மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.
நன்றியுணர்வை பிரதிபலிக்கும் வகையில் சமூக மக்கள் ஒன்றாக திரண்டு தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டனர். அமைதி மற்றும் வளத்திற்காக வேண்டி கொண்ட அவர்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மற்றும் அண்டை வீட்டாருடனும் கொண்டாட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
நார்வேயில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு புறப்பட்ட ஜெர்மனி நாட்டின் ராக்கெட் ஒன்று சில வினாடிகளில் கடலில் விழுந்து வெடித்தது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒத்துழைக்காவிட்டால் கூடுதல் வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என ரஷிய அதிபர் புதினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு ரஷியா மற்றும் என்னால் முடியவில்லை என்றால், அது ரஷியாவின் தவறு என்றே நினைக்கிறேன். அப்படி இருக்க கூடாது. ஆனால், அது ரஷியாவின் தவறு என நான் கருதினால், ரஷியாவில் இருந்து வெளிவரும் அனைத்து எண்ணெய்களின் மீது 2-வது முறையாக வரிகளை விதிக்க போகிறேன் என மிரட்டும் வகையில் கூறியுள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், அவர்களின் இந்த சந்திப்பு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையே கூட்டணி அமைப்பதற்கான சந்திப்பாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தமிழக அமைச்சர் ரகுபதி கூறும்போது, சந்திப்பு குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் வேறு வேறு காரணங்களை சொல்கிறார்கள். யார் பொய் சொல்கிறார்கள் என்பது விரைவில் தெரியும் என விமர்சித்து உள்ளார்.