ஓணம் பண்டிகை - விமான கட்டணம் அதிகரிப்பு
சென்னை - திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.4,359ல் இருந்து ரூ.19,903ஆக அதிகரிகப்பட்டுள்ளது. சென்னை - கொச்சி இடையே விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798ஆக அதிகரித்துள்ளது. சென்னை - கோழிக்கோடு இடையே விமான கட்டணம் ரூ.3,629ல் இருந்து ரூ.10,286ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, சவரன் ரூ.78,360க்கும், ஒரு கிராம் ரூ.9,795க்கும் விற்பனை ஆகிறது.
தினகரன் கருத்துக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுப்பு
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் முன் தினகரன் கூறிய கருத்து குறித்து பதிலளிக்க செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துவிட்டார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என தினகரன் கூறிய கருத்துக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். தினகரன் மனதில் எதை வைத்து அப்படி கூறினார் என எனக்கு தெரியாது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 576 புள்ளிகள் உயர்ந்து 81,144 புள்ளிகள் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 156 புள்ளிகள் உயர்ந்து 24,871 புள்ளிகள் வர்த்தகம் ஆகிறது. ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி உள்ளன.
அதிமுகவை விமர்சிக்கக் கூடாது - அமித்ஷா அறிவுறுத்தல்
அதிமுக குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது - டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் அமித் ஷா கண்டிப்புடன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்பட மத்திய மந்திரி அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை
டெட் தகுதித் தேர்வு பற்றி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகம் வளாகத்தில் இன்று மாலை 4 மணி நடைபெற உள்ளது.
பீகார் தேர்தல்தான் காரணமா? - ப.சிதம்பரம் கேள்வி
ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகள்வரவேற்கத்தக்கது என்றாலும் 8 ஆண்டுகள் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அடுக்குகள் குறைப்புக்கு பீகார் தேர்தல்தான் காரணமா?; ட்ரம்ப் விதித்த வரி, அல்லது நாட்டில் நிலவும் மந்தமான வளர்ச்சி ஆகியவைதான் காரணமா? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
நான் அப்படி பேசவே இல்லை - பிரேமலதா விஜயகாந்த்
அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்டில் பெரியார் படம்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கலை இயக்குநர் தோட்டா தரணி வரைந்த பெரியார் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(செப்.4) திறந்து வைக்கிறார். பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனையின் தாக்கம் குறித்து ஆக்ஸ்போர்டில் முதல்-அமைச்சர் உரையாற்றுகிறார்
விஜய் கடுமையான உழைப்பாளி - இயக்குநர் மிஷ்கின்
தம்பி விஜய் இப்போது அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார். என்னைப் பொறுத்தவரை அவர் கடுமையான உழைப்பாளி. ரொம்ப நல்ல மனுஷன். அரசியலாக இதை முலாம் பூச வேண்டாம் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.