தூத்துக்குடி: கப்பலில் சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இன்று மிதவை கப்பலில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. சுத்தம் செய்யும் பணியில் ராஜஸ்தானை சேர்ந்த சந்தீப் குமார், தூத்துக்குடியை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லையை சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சுத்தம் செய்யும் பணியின்போது தொழிலாளர்கள் 3 பேரையும் விஷவாயு தாக்கியது. இந்த சம்பவத்தில் 3 தொழிலாளர்களும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.