உ.பி. பதிவு எண்... நடிகர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற மர்ம கார் - போலீசார் விசாரணை

போலீஸ் உயர்அதிகாரிகள் அந்த காரை மடக்கி பிடித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.;

Update:2025-09-28 17:50 IST

கரூர்,

கரூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நடிகர் விஜய் திருச்சி விமானநிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தார். திருச்சி நெ.1 டோல்கேட் அருகே நடிகர் விஜய்யின் காரை பின்தொடர்ந்த கருப்பு நிற கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

விமானநிலையம் அருகே வந்ததும், ஆங்காங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பின்னால் வந்த மர்ம காரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் விமானநிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவுவாயில் அருகே இருந்த தடுப்புகளை இடித்துக்கொண்டு சென்றது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உயர்அதிகாரிகள் அந்த காரை மடக்கி பிடித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த காரில் இருந்த நபர் தனது குடும்பத்தினர் நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அதனால் அவரை பின்தொடர்ந்து வேகமாக வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த கார் உத்தரபிரதேச மாநில பதிவு எண்ணை கொண்டு இருந்தது. இதுகுறித்து விமானநிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்