வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு சாலையில் அந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
மகாபலிபுரம்,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டிக்கு
புறப்பட்டு சென்ற வேன், சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மருவத்தூர் பகுதியை சேர்ந்த விஜய், முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட ஆறு பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதில் விஜய் என்பவர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.