முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜய் படம் பொறித்த 'கர்சீப்' - மாணவர்கள் செயலால் பரபரப்பு
விஜய் படம் பொறித்த கைக்குட்டையை இளைஞர்கள் காட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.;
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்றும், நாளையும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் நடக்கிறது. தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்தினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் படம் பொறித்த கைக்குட்டையை இளைஞர்கள் சிலர் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.