விஜய் 27-ந் தேதி நாமக்கல், கரூரில் ஆதரவு திரட்டுகிறார்
வாரத்தில் சனிக்கிழமை மட்டும் விஜயின் பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி அன்று தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார். வாரத்தில் சனிக்கிழமை மட்டும் அவருடைய பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டது.
வருகிற சனிக்கிழமை (நாளை மறுநாள்) வடசென்னை, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்வார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக த.வெ.க. நிர்வாகிகள் சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதங்கள் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் பிரசார பயணத்தில் திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. முப்பெரும் விழா நடந்து முடிந்த கரூரிலும், நாமக்கல்லிலும் 27-ந் தேதி அன்று விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே அவர், வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் எப்போது பிரசாரம் செய்வார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.