விழுப்புரம்: விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
தண்ணீர் திறப்பின் மூலம் 3,200 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறும்.;
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
”விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடுர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு 2025-2026-ம் ஆண்டு பாசனத்திற்கு 19.11.2025 முதல் 02.04.2026 வரை 135 நாட்களுக்கு 328.560 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர், சிறுவை, பொம்மூர், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி, நெமிலி, எரையூர், தொள்ளமூர், கடகம்பட்டு மற்றும் கொண்டலாங்குப்பம் மற்றும் புதுவை மாநிலம் புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, தேத்தம்பாக்கம் மற்றும் லிங்காரெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 3,200 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.