விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஆலையின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update:2025-09-18 15:13 IST

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் நேற்று காலை பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த விபத்து சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் பட்டாசு ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம், ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்