வியாசர்பாடி தீ விபத்து: வீடுகளை இழந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று அனைத்து உதவிகளையும் பாஜக நிர்வாகிகள் வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வியாசர்பாடியில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பற்றி சேதமடைந்துள்ளதாக வரும் செய்திகள் பதபதைக்கின்றன. நல்வாய்ப்பாக, உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கேள்விப்பட்டேன்.
தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் வேளையில், வீடுகளை இழந்த மக்களுக்கு தக்க அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக பாஜக நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.