குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ‘கட்டைக் கொம்பன்’ காட்டு யானை - நீலகிரியில் பரபரப்பு

வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்து யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.;

Update:2025-11-17 21:23 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து விடுகின்றன. அந்த வகையில் கூடலூரை அடுத்த குறிஞ்சி நகர் பகுதியில், குடியிருப்பு பகுதிக்குள் ‘கட்டைக் கொம்பன்’ என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். ஊரில் இருந்த வாலிபர்கள் யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதற்கிடையில், வனத்துறையினர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, பட்டாசு வெடித்து யானையை காட்டுப் பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் விரட்டினர். 


Tags:    

மேலும் செய்திகள்