வந்தே பாரத் ரெயில்களில் அசைவ உணவு ரத்தா..? - ரெயில்வே விளக்கம்
வந்தே பாரத் ரெயில்களில் அனைத்து வேளை உணவுகளிலும் அசைவ உணவுகள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் உணவு சேவையில் குறைபாடுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பேசப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வந்தே பாரத் ரெயிலில் உணவு திணிப்பு முறை என மலையாளர் எழுத்தாளர் பதிவால் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறி இருந்தது.
இந்நிலையில் சென்னையில் இருந்து நாகர்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் காலை உணவு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்படி ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் டிக்கெட் புக் செய்யும்போது, மதியம் மற்றும் இரவு மட்டுமே அசைவ உணவு வழங்கப்படும் என காண்பிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் வந்தே பாரத் ரெயில்களில் அசைவ உணவு வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டதாக பரவும் தகவலுக்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி வந்தே பாரத் ரெயில்களில் அனைத்து வேளை உணவுகளிலும் அசைவ உணவுகள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுகிறது என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.