சென்னை மணலியில் மேகவெடிப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னையில் 7 இடங்களில் நேற்று மிக கனமழை பதிவானதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update:2025-08-31 12:13 IST

சென்னை,

சென்னையின் மணலி, கொரட்டூர், வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மணலியில் மிக மிக பலத்த மழைக்கு மேக வெடிப்பே காரணம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

* மணலி 27 செ.மீ., * மணலி புதுநகர் 26 செ.மீ, * விம்கோ நகர் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் 7 இடங்களில் நேற்று மிக கனமழை பதிவானதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னை மதுரவாயல் நொளம்பூர் கூவம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளநீர் செல்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரவாயல் போலீசார் தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைத்துள்ளனர். தடுப்புகளை மீறி ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூரில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்