விஜய் கைது செய்யப்படுவாரா? - அமைச்சர் துரைமுருகன் பதில்

செந்தில் பாலாஜியை யாரும் குறை சொல்லவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.;

Update:2025-10-04 15:13 IST

வேலூர்,

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின். கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது இருந்த சூழல் வேறு; கரூரில் 41 பேர் பலியானது சாதாரணம் அல்ல. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது. ஆனாலும் அவர் உண்மையை கூறியிருக்கிறார்.

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள். ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை. ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார். ஒரு கட்சியின் தலைவர் அவரது கட்சிக்கேற்ப பேசுகிறார்.

கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை யாரும் குறை சொல்லவில்லை. அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சொல்வார்கள். நாங்கள் (திமுக) யாரையும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. போலவே எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்