அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-19 19:04 IST

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை சுபதினத்தில், தமிழ்நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. இந்நாளில் அன்னை லக்ஷ்மி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, நமது வாழ்க்கையை அன்பு மற்றும் கருணை குணத்தால் நிரப்பி, அமைதி மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு இணக்கமான சமூகத்தை நாம் வளர்க்க அருள்புரியட்டும்!

அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்