விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை - எடப்பாடி பழனிசாமி

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-21 11:37 IST

கோவை,

கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படி தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புகின்ற கடவுள்களை இன்றைக்கு மாநாட்டின் மூலமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மாநாட்டை நடத்துகின்றனர். அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

ஆங்கிலம் குறித்து அமித்ஷா அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு, தாய்மொழி என்பது முக்கியம். அனைவருக்கும் தாய்மொழி என்பது மிக முக்கியம். தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி தான் இதனை சொல்லி உள்ளார்.

உடல் ஆரோக்கியத்திற்கு யோகா மிக முக்கியம் பாரத பிரதமர் அவர்கள் அதனை வலியுறுத்தியே யோகாவின் நன்மையை எடுத்துரைத்து வருகிறார்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்