மனைவி பிரிந்து சென்றதால் 3 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளைஞர் உயிரிழப்பு - குழந்தைக்கு சிகிச்சை

மனைவி பிரிந்து சென்றதால் 3 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2025-04-08 00:51 IST

கோப்புப்படம் 

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள அயூப்கான்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் குமார் (33 வயது). இவருக்கு மனைவி மற்றும் சுபஸ்ரீ (3 வயது) என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் குமார் தனது குழந்தையுடன் வசித்து வந்தார். அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலையில் குமார் தனது குழந்தை சுபஸ்ரீயுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் தண்ணீரில் மூழ்கிய குமார் பரிதாபமாக இறந்தார். குழந்தை சுபஸ்ரீ தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியினர் விரைந்து சென்று, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மானூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்