சுடிதாரில் கஞ்சா மறைத்து வைத்திருந்த இளம்பெண் கைது

ஆரைக்குளம் பாலத்திற்கு கீழ் பகுதியில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.;

Update:2025-11-09 08:56 IST

நெல்லை,

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் தலைமை ஏட்டு உச்சிமாகாளி, முதல்நிலை ஏட்டு வீரகாளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆரைக்குளம் பாலத்திற்கு கீழ் பகுதியில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த இளம்பெண் அங்கிருந்து நைசாக வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் அந்த பெண்ணை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் ஆரைக்குளம் பெதர்த்தாள் நகரை சேர்ந்த இளங்கோ மனைவி ரம்யா (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் அவரை பெண் போலீசார் சோதனை செய்த போது சுடிதார் பேண்டில், பாலித்தீன் பைகளில் 2 பொட்டலம் இருந்தது.

அதனை எடுத்து பார்த்த போது கஞ்சா என்பது தெரியவந்தது. சுமார் 20 கிராம் எடை கொண்ட 2 கஞ்சா பொட்டலங்கள் ரம்யாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்