மெக்சிகோவில் விமான விபத்தில் 3 பேர் பலி
குறிப்பிட்ட வகையை சேர்ந்த ஈக்களை விமானத்தில் இருந்து பறக்க செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.;
மெக்சிகோ,
மெக்சிகோவில் சிறிய விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். கவுதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்க கூடிய குறிப்பிட்ட வகையை சேர்ந்த ஈக்களை விமானத்தில் இருந்து பறக்க செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலியானவர்களில் 2 பேர் கவுதமாலாவை சேர்ந்த விமானிகள் ஆவர்.