சீனா: கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து விபத்து - 7 பேர் பலி

மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.;

Update:2025-08-22 21:14 IST

பீஜிங்,

சீனாவின் கியூங்ஹாய் மாகாணத்தில் பாயும் யல்லோ ஆற்றில் ரெயில்வே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கட்டுமான பணியின்போது இன்று அதிகாலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது, கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் 16 பேர் ஆற்றில் விழுந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 9 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு மாயமாகினர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்