நேபாள தேர்தல் நியாயமாக நடக்கும் - பிரதமர் சுசீலா கார்கி

அடுத்த ஆண்டு மார்ச் 5-ந்தேதி தேர்தல் உறுதியாக நடக்கும் என்று பிரதமர் சுசீலா கார்கி கூறியுள்ளார்.;

Update:2025-10-22 21:56 IST

காத்மாண்டு,

நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் அந்த நாட்டின் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து நாட்டின் இடைக்கால பிரதமராக முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். மேலும் அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சுசீலா கார்கி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் நேபாள தேர்தல் நியாயமாக நடக்கும் என தெரிவித்தார். அவர், “அடுத்த ஆண்டு மார்ச் 5-ந்தேதி தேர்தல் உறுதியாக நடக்கும். அந்த தேர்தல் யாருடைய இடர்பாடுகள், குறுக்கீடுகள் இல்லாமல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்கும்” என பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்