இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணத்தின்போது மன்னர் சார்லஸ் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.;

Update:2025-05-27 22:58 IST

ஒட்டாவா,

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் கனடா சென்ற அவருக்கு, தலைநகர் ஒட்டாவாவில் அந்த நாட்டின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு கனடா நாட்டின் புகழ்பெற்ற ஐஸ் ஹாக்கி வீரர் கிறிஸ் பிலிப்ஸை மன்னர் சார்லஸ் சந்தித்தார். தொடர்ந்து லேண்ட்ஸ் டவுன் பூங்காவில் உள்ளூர் வியாபாரிகளை மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் கனடா கவர்னர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமான ரிடியூ ஹாலில் இருவரும் மரக்கன்று நட்டனர்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது மன்னர் சார்லஸ் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது கனடா மீதான அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்