குடும்ப தகராறில் மனைவியின் காலை வெட்டிய கணவன் கைது
கறி வெட்டும் கத்தியை எடுத்து இக்ரா பீவியின் காலை அவரது கணவர் துண்டாக வெட்டியுள்ளார்.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் சர்கோதா மாகாணத்தில் உள்ள சத்தார் பகுதியை சேர்ந்தவர் மசார். இவரது மனைவி இக்ரா பீவி(வயது 22). குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இக்ரா பீவிக்கும், மசாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மசார், தனது மனைவியின் கை, கால்களை கட்டி, கறி வெட்டும் கத்தியை எடுத்து இக்ரா பீவியின் காலை துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் மசார் அங்கிருந்து தப்பியோடினார்.
வலியால் அலறித் துடித்த இக்ரா பீவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மசாரை தீவிரமாக தேடி வந்த நிலையில், சர்கோதா சாக் பகுதியில் வைத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.