காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

காசாவின் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது.;

Update:2025-10-20 04:15 IST

டெல் அவிவ்,

காசாவில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10-ந் தேதி முதல் அங்கே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதனால் காசாவை விட்டு வெளியேறி இருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததால் அவர்களிடையே மகிழ்ச்சியும் திரும்பி உள்ளது.

இந்த நிலையில் காசாவின் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று திடீரென தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் அங்கே குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அத்துடன் தரைவழி தாக்குதலும் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்